சேலத்தில் ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி!
சேலம் மாவட்டத்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, வனவாசி பகுதியில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாடி வைத்தார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைதொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, ரூ.46.39 கோடி மதிப்பீட்டில், 6,832 பயனாளிகளுக்கு தையல் மெசின், இலவச அம்மா ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.