தரமான செயல்பாடு.! முதல்வர் பழனிசாமிக்கு விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க அமைப்பு.!
குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ (Paul Harris Fellow) எனும் விருதினை அமெரிக்காவை சேர்ந்த ரோட்டரி அமைப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் செயல்பட்டு வருகிறது ரோட்டரி அமைப்பானது, உலகில் பல்வேறு பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு கவுரவ விருது அளித்து பெருமைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கவுரவ விருது கிடைத்துள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர் பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ (Paul Harris Fellow) எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.