ரூ.65 கோடி செலவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ..!

Default Image

பால்வளத்துறை சார்பில் மதுரை பால் பண்ணை வளாகத்தில் ரூ. 65.89 கோடி செலவில் நாளொன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் நிதியிலிருந்து 65 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில், சுமார் 100 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தேசிய பால்வள வாரியத்தின் மூலம் மதுரை பால் பண்ணை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 30.000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் ஐஸ்கிரீம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் 50 மி.லி. 100 மி.லி. 500 மி.லி 1 லிட்டர் அளவுகளிலும் மற்றும் நுகர்வோர்களுக்கு தேவைகேற்ப அளவுகளில் ஐஸ்கிரிம் சிப்பமிடும் வசதிகளுடன், பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் குல்ஃபி ஐஸ்கிரீம் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அவை தென் மாவட்டங்களில் தங்குதடையின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்