மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை.!

Default Image

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வு காரணமாக தமிழகத்தில் பல்வேரு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையை சுற்றிய வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், மற்ற முக்கிய அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்யவுள்ள கனமழை குறிப்பிட்டு அனைத்து மாவட்டங்களிலும்  எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தங்கும் இடம் , உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து உயர்பிரிவு இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்