10 நாட்கள்.! வெளிநாட்டு பயணத்தை இன்று துவங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில்தொடங்க, தொழில் விரிவுபடுத்த என மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல்வேறு நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தில் சுமார் 27 லட்சம் புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு நிறைவடைந்த நாளில் தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில்,தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளார் என கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதனை தொடர்ந்து இன்று இரவு, தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பன்னாட்டு தொழிலதிபர்களை சந்திக்க முதல்வர் வெளிநாடு புறப்படுகிறார். இன்று இரவு 9.40 மணிக்கு துபாய் செல்ல உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கிருந்து முதல்வர் ஸ்வீடன் செல்கிறார்.
அதன் பின்னர், ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். மேற்கண்ட நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து தமிழக்த்தில் தொழில்தொடங்குவது குறித்து பேச உள்ளார். இந்த பயணத்தில் முதல்வரின் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண் ராவ் ஆகியோர் உடன் செல்கின்றனர். 10 நாட்கள் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்ப உள்ளார்.