ஒரு சர்ப்பிரைஸ்., ஒரு புத்தகம்., 2 அருங்காட்சியகங்கள்! முதலமைச்சரின் முக்கிய நிகழ்வுகள்…

கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகங்களுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Tamilnadu CM MK Stalin

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அருங்காட்சியகங்கள் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவீட்டில் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில், “இரும்பின் தொன்மை” எனும் ஒரு நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிடுகையில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வு 23.01.2025 (இன்று) காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது.” என பதிவிட்டு இருந்தார். இதில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என பதிவு செய்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மற்றும் அழைப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உண்டாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்