ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் கம்பெனிகளுக்கு முதல்வர் விசிட்.! உற்சாகத்துடன் கூறிய சூப்பர் செய்தி…

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன அலுவலகங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். 

TN CM MK Stalin visited Google, Apple, Microsoft in USA

சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதல் நாளில் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பன்னாட்டு தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு முடிந்து நேற்று முதல் நாளில் 6 முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ரூ.900 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீடு கிடைத்துள்ளது என்றும், சுமார் 4000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அடுத்ததாக, அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு வருகை புரிந்தேன். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு பல்வேறு வாய்ப்புகள், பன்னாட்டு கூட்டாண்மைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம் ” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்