சிகாகோ சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு.!
சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றுள்ளார். அங்கு அவருக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மேம்பட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து தமிழர் பரம்பரியதோடு அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழல் பற்றி விவரித்தார்.
அதனை அடுத்து, முதல் நாளிலேயே சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், அங்குள்ள கூகுள் , மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் சான் பிராசிஸ்கோவில் உள்ள தமிழர்ளுடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதனை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ புறப்பட்டார். தற்போது சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பளித்தனர். மேள தாளங்கள் முழங்க, தமிழர்கள் விளையாட்டான சிலம்பம் சுற்றி முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ போல சிகாகோவிலும், இங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளார். அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க உள்ளார். பின்னர் இங்குள்ள தமிழர்களுடன் சந்திப்பு நிகழ்த்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.