முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம்… எந்தெந்த தேதியில் எங்கு இருப்பார்.?
சென்னை : நாளை முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பயண விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அவர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, தொழில் நிறுவன முதலீட்டர்களுடன் ஆலோசனை நடத்தியும் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்க பயணம் மேற்கொண்டு முதல்வர் வருகைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். அவர் நாளை (ஆகஸ்ட் 28) சான் பிரசிஸ்க்கோ சென்றடைவார்.
அதன் பின்னர் ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று சான் பிராசிஸ்க்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்க்கோவில் அமெரிக்க தமிழ் சங்கத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்த்துகிறார்.
வரும் செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிரசிஸ்க்கோவில் இருந்து சிகாகோ பயணம் மேற்கொள்கிறார். அடுத்ததாக செப்டம்பர் 7ஆம் தேதி சிகாகோவில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.
அதனை அடுத்து செப்டம்பர் 11ஆம் தேதி வரையில் முக்கிய நிறுவன தலைவர்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சந்திப்பை நிகழ்த்துகிறார். பின்னர், செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து தாயகம் (சென்னை) திரும்புகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.