சாதி மத கோட்பாடுகளை எதிர்த்த சமூக சீர்திருத்தவாதி, திராவிட கொள்கைகள் தோன்றுவதற்கு வித்திட்ட முக்கிய தலைவர் , பன்மொழி கலைஞர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு முழு உருவ சிலையும், மணி மண்டபமும் அமைக்கப்படும் என முதலவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021இல் அறிவித்தார்.
அதன்படி, இன்று சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் 2.49 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசருக்கு முழுஉருவ சிலையுடன் , மணிமண்டபம் அமைக்கபட்டது. இந்த சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது உடன் மதிமுக தலைவர் வைகோவும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல் – முதல்வர் ஆலோசனை..!
அதன் பிறகு வீடியோ மூலம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அயோத்தி தாசர் பற்றி பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், கடந்த 03.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் அயோத்தி தாசருக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தோம்.
அதன் படி, இன்று கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ‘அறிவொளி இல்லம்’ என அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசரின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். தமிழர், திராவிடர் என்பதை மொழி, கலாச்சாரம் என்பதை தாண்டி அதனை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசர்.
1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பூர்வகுல தமிழர்கள் என குறிப்பிட கூறியவர் பண்டிதர். 1891ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபை எனும் இயக்கத்தை ஆரம்பித்தார். 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் எனும் இதழை ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறினார் பண்டிதர் அயோத்திதாசர்.
எழுத்தாளர், ஆய்வாளர், மானுடவியல் பதிப்பாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழி புலவர், மொழியியல் வல்லுநர், பன்மொழி அறிந்தவர், சிறந்த செயல்பாட்டாளர் என மண்முகம் கொண்டவர் அயோத்திதாசர். 150 ஆண்டுகளாக இயங்கும் தமிழர் அறிவியல் இயக்கத்தை தோற்றுவித்தவர்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதி , மதம் என உரக்க கூறியவர். 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசர் நினைவாக 5 ஆண்டுகளில் 1000 கோடிரூபாய் செலவில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், தமிழர்களின் இரவு பகலற்ற அறிவொளியாக அயோத்திதாசர் விளங்குகிறார் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…