மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகம் இருக்காது – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

MK Stalin: கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதனால் மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன்றனர். இந்த நிலையில், மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் அதிமுகவுடன் கைகோர்த்து செயல்படுவதாக கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிட கட்சியாக நினைக்கவில்லை. பழனிசாமி கட்சிக்கும் திராவிட கொள்கைக்கும் தொடர்பு இல்லை.

நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சி பிரிந்து இருப்பதால் தான் பாஜக வெற்றி பெறுகிறது. தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் மண், சமூக நீதி மண், தமிழன் என்ற உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண். தமிழ்நாட்டில் இதை ஒருமுகப்படுத்தியதை போல இந்தியா முழுமைக்கும் ஒருமைப்படுத்தி நினைத்தேன்.

எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டில் மக்களை பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது என்பதை பாஜக உணர வேண்டும். தேசிய அளவில் ஒற்றை சிந்தனையுடன் ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக கூறிவந்தேன். கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவோ ஜனநாயகம் இருக்காது. இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி  சொல்லும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்றும் இந்திய ஒன்றியத்தை இந்தியா  கூட்டணி ஆள்கின்ற அளவுக்கு வலிமையான வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்