பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம்… முதலமைச்சர் ஸ்டாலின்!

mk stalin

MK Stalin: கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலாவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், மத்திய பாஜக அரசை விமர்சித்தும் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில் குறிப்பாக ஆங்கில ஊடங்களில் வெளியாகும் தகவலை மேற்கோள்காட்டி பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் புகழ்பெற்ற லோக்நிதி (LoknitiCSDS) என்ற ஆய்வு அமைப்பு, வரும் மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27% பேர் வேலையின்மை தான் முக்கியப் பிரச்சினை என்று வாக்களித்துள்ளனர். அதேபோன்று 23% பேர் விலைவாசி உயர்வு, 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதனால் மத்திய பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் அதிலிருந்து ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்