cm mk stalin say about lok sabha election 2024 [Photo: PTI]
MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும் இடமெல்லாம் இந்தியா கூட்டணிக்கும், திமுகவுக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு மீது எந்த அதிருப்தியும் நிலவவில்லை.
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் பயனாளிகள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது. நிதி நிலை சீரானதும் மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து பாஜக தமிழ்நாட்டில் இருப்பை காட்ட பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. பாஜக முயன்றாலும் மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்று அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.
தேர்தல் களத்தில் திமுகவுக்கு போட்டி அதிமுகவும், சித்தாந்த ரீதியிலான களத்தில் பாஜகவும் எதிரியாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி தான் நாட்டின் பிரதமர் முகமாக உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பத்தைப் பற்றி பாஜக இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும், ஊடகப் பிரச்சார பலத்தாலும் தங்கள் இமேஜைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.
பாஜகவின் மதவாத அரசியல் கொள்கையைத் திமுக எப்போதும் உறுதியாக எதிர்த்தே வந்திருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றாக வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்த்தில்…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…