தேர்தல் களத்தில் எங்களுக்கு போட்டி அவர்கள் தான் – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும் இடமெல்லாம் இந்தியா கூட்டணிக்கும், திமுகவுக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு மீது எந்த அதிருப்தியும் நிலவவில்லை.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் பயனாளிகள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது.  நிதி நிலை சீரானதும் மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து பாஜக தமிழ்நாட்டில் இருப்பை காட்ட பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. பாஜக முயன்றாலும் மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்று அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.

தேர்தல் களத்தில் திமுகவுக்கு போட்டி அதிமுகவும், சித்தாந்த ரீதியிலான களத்தில் பாஜகவும் எதிரியாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி தான் நாட்டின் பிரதமர் முகமாக உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பத்தைப் பற்றி பாஜக இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும், ஊடகப் பிரச்சார பலத்தாலும் தங்கள் இமேஜைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.

பாஜகவின் மதவாத அரசியல் கொள்கையைத் திமுக எப்போதும் உறுதியாக எதிர்த்தே வந்திருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றாக வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்