நிதி கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

mk stalin

MK Stalin : ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்க பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்வில் வளர்ச்சித் திட்ட பணிக்கான இலட்சினையை வெளியிட்ட பின் முதல்வர் உரையாற்றினார். அப்போது, முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது, சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்.

Read More – பிரதமர் மோடி வருகை… கருப்பு கொடி காட்டி நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

சென்னையை இந்தியாவின் தலைசிறந்த நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது வேண்டுகோள் அல்ல, கட்டளை.  பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும். வளர்ச்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு வடசென்னையை மிக முக்கியமாக பார்க்கிறது. என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வடசென்னை தான்.

Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு!

சென்னையின் அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக உருவாக்கியதுதான் என திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். இதன்பின் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசியதாவது, தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது வராத பிரதமர் மோடி, வாக்கு கேட்க மட்டும் குமரி வருகிறார். குஜராத்துக்கு மட்டுமே உடனே நிதி தரும் பிரதமர் மோடி, 3 மாதங்கள் ஆகியும் தமிழ்நாட்டுக்கு இன்னும் நிதி வழங்கவில்லை. மத்திய அரசுக்கு அதிக வரியை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. ஆனால், நிதி கேட்டால் பிரிவினைவாதி என கூறுகிறார்கள்.

Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

கொடுக்கும் வரிக்கேற்ப தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி நிதியை கொடுக்கிறார்களா?, ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் தருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் பிரிவினை பேசவில்லை, ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம் என்றும் தேசபக்தி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை எனவும் விமர்சத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்