வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
MK Stalin : பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறையற்றினார். அப்போது கூறியதாவது, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். திமுக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த முதல்வர், கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சராக மட்டுமில்லாமல் களத்தில் நேராக ஆய்வு செய்கிறேன் என்றார்.
Read More – பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடும் துணிவோடும் வந்திருக்கிறேன். சிறப்பான 3 ஆண்டுகால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும்போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெல்வோம்.
சிந்தித்து செயல்படுவதால் பொருளாதாரம் வளர்கிறது, தமிழ்நாடு முன்னேறுகிறது. ஒவ்வொரு மாவட்டதிற்கு தனித்தனியாக செயல் திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து வருகிறது. மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செவிமடுப்பவன் நான். தமிழ்நாட்டை, தமிழர்களை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது.
Read More – அடக்கி வாசிங்க குஷ்பூ.. ‘பிச்சை’ சர்ச்சைக்கு பரபரப்பு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் அமைச்சர்.!
திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு சிலர் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் புகட்ட வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது. பொய்களும், வாட்சப் கதைகளும் பாஜகவின் உயிர் மூச்சு. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தடுக்கிறது என பிரதமர் மோடி பொய் சொல்கிறார். பாஜகவின் பொய் கட்டுக்கதைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
இந்திய நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாதவர் பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தமிழ்நாட்டின் உரிமையையும், நாட்டின் ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுகிறோம். அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். பாசிசத்தை அழிக்க இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். மக்கள் விரைவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.