மக்களுடன் முதல்வர் திட்டம்… 3.5 லட்சம் பயனாளர்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

Tamilnadu CM MK Stalin

தமிழக அரசின் சேவைகள் கிராமப்புற மற்றும் ஊரக பகுதி மக்களுக்கும் நேரடியாக விரைவாக சேரும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”. இந்த திட்டம் மூலம் இணைய சேவை வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று முகாம் அமைத்து மக்களிடம் அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக கேட்டு அதனை ஆன்லைன் வழியாக பதிவிட்டு அந்தந்த துறை சம்பந்தமான அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதே இதன் நோக்கமாகும்.

எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி – ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

முதல்வர் – அமைச்சர்கள் :

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்தும் மற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் சென்னை கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு , திமுக எம்பி தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக திட்டங்கள் :

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னர், மகளிருக்கான விடியல் பயணம்,  புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி முதல்வர், நான் முதல்வன், உங்கள் தொகுதியின் முதல்வர், கள ஆய்வில் முதல்வர் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர்.

மக்களை தேடி முதல்வர் :

மக்களுடன் முதல்வர் திட்டமானது அரசு சேவைகளை அடிதட்டு மக்களும் விரைவாக பயன்பெறும் வகையில், அரசு திட்டங்கள் அனைத்து கடைகோடி மக்களுக்கும் சென்றடையும்  நோக்கத்திலும் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2023 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி கோவையில் இந்த “மக்களை தேடி முதல்வர்” திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அரசு திட்டங்கள் காலதாமதம் ஆவதை தவிர்த்து அடுத்தட்டு மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊரக பகுதி மக்கள் என பலரும் பயன்பெற்று வருகின்றனர்.

30 நாளில் தீர்வு : 

முதற்கட்டமாக நகர்ப்புற மக்கள், நகர்ப்புற அருகில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 2058 முகாம்கள் அமைக்கப்பட்டன. அடுத்து இரண்டாம் கட்டமாக ஊராகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாம்கள் மூலம் இணை சேவை வழியாக மக்களின் குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு அவை அந்தந்த தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 30 நாட்களில் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தீர்வுகள் வர இருக்கிறது.
  • வருவாய்துறை மூலமாக 42,900 பேர் பட்டா மாறுதல் பெற்றுள்ளனர். 18,000 பேர் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளனர். ‘
  • மின்சார வாரியத்தின் கீழ் 26 ஆயிரத்து 383 பேர் புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்.
  • நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37,700 பேர் கட்டிட அனுமதி, புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்.
  • சிறுகுறு வணிகர்கள் துறையில் 1,190 பேர் 60 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுள்ளனர்.
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 கோடி ரூபாய் அளவுக்கு 3,269 பேர் மூன்று சக்கர நாற்காலிகள், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுள்ளனர்.
  • கூட்டுறவுத்துறை சார்பில் 6.6 ரூபாய் அளவிற்கு பல்வேறு சேவைகளை மக்கள் பெற்றுள்ளனர்.
  • 30 நாளில் 3.50 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்

என மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் (TNPSC) மூலம் தேர்வான 1,598 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்