தானியங்கி கார் பயணம்., தந்தை பெரியாரின் பொன்மொழிகள்.., முதலமைச்சரின் அசத்தல் டிவீட்.! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் கூற்றை பதிவு செய்து அதனுடன் தான், தானியங்கி காரில் பயணித்த வீடியோவையும் சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tamilnadu CM MK Stalin visit USA

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோ வந்துள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் முதலமைச்சருக்கு அங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சான் பிராசிஸ்கோவில் முதலீட்டாளர் மாநாடு, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவன அலுவலகங்களுக்கு விசிட், சான் பிராசிஸ்கோ தமிழர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரிலும் பயணித்தார்.

ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தானாகவே இயங்கும் நவீன வசதி கொண்ட காரின் முன் சீட்டில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடீயோவை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் தந்தை பெரியார் “இனி வரும் உலகம்” எனும் பதிப்பில் குறிப்பிட்ட, ” இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை.” என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்