ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! 

மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

TN CM MK Stalin pays his tribute to EVKS Elangovan body

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். இளங்கோவன் உடல்  அவரது சொந்த ஊரான ஈரோட்டிற்கு, இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்