போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு.! விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட தமிழக அரசு.!

Drugs Free Tamilnadu

சென்னை : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்கான விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதலமைச்சர் கூற, மாணவர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில், அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி தயாநிதி மாறன், தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதே போல, போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என விழிப்புணர்வு வீடியோக்களையும் தமிழக அரசு தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் முதல் முறையே மறுப்போம். போதை தவிர்ப்போம். மகிழ்ச்சி பாதையில் நடப்போம். என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடியோக்களின் இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதை ஒழியட்டும், பாதை மலரட்டும், போதை பொருள் உங்கள் உடல்நலனை மட்டுமல்ல, உங்கள் குடும்ப நலனையும், நாட்டு நலனையும் சேர்த்தே கெடுக்கும். எங்கேயும் எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம் என கூறுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்