Tamilnadu CM MK Stalin [File Image]
சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி ஒழிப்புக்காக கடுமையாக போராடிய சமூக நீதிப் போராளியாகும் விளங்கும் மறைந்த தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!
முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கீ.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர், தி.க திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, சேகர்பாபு, அன்பில் மகேஷ், துரைமுருகன், ஆகியோரும் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரும், திமுக முக்கிய பிரமுகர்களான ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…