திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
Sharmi
  • திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார்.
  • இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலியை செலுத்து விட்டு ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கலில், திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான திரு. சொர்ணம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட திரு சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ”ஒரே ரத்தம் எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய இளைய சூரியன்” வார ஏட்டி பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர்.

எழுத்தாளர். இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

7 minutes ago

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

57 minutes ago

Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!

சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…

1 hour ago

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

2 hours ago

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

2 hours ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

3 hours ago