மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!
MK Stalin : இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநில கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் (மார்ச் 6) குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. அதன்படி, தொகுதி பங்கீடு, கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பரப்புரை மற்றும் வாக்குறுதி என தேர்தல் களம் பரப்பரப்பாக காணப்படுகிறது.
Read More – திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது.! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.!
இந்த சூழலில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த நாள் (மார்ச் 6) என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியத் தேர்தல் வரலாற்றில் மாநிலக் கட்சி முதன்முதலாக ஆட்சி அமைத்த நாள் மார்ச் 6ம் தேதியாகும். அதன்படி, இந்த நாளில் தமிழகத்தில் 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது.
Read More – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.
இந்த நாளை நினைவுகூரும் வகையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள் இன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.
Read More – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம், இன்று மொத்த இந்தியாவின் கூட்டாட்சித்தன்மையையும், பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம், நாட்டைக் காப்போம் என தெரிவித்துள்ளார்.