‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin : அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நான் முதல்வன், இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றியும் வருகிறது.
Read More – அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி!
அரசின் பல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை சென்னையில் தனது முகாம் இல்லத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமையான திட்டம்தான் நீங்கள் நலமா என்ற திட்டம். தற்போது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!
மக்களிடம் திட்டங்கள் சென்று சேர்வதை முறையாக கண்காணிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் நலமா? திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் ஆகியோர் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசின் திட்டங்கள் வந்து சேர்கிறதா? உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிவார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.