ஆளுநர் உரைக்கான பதிலுரை…. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசப்போவதென்ன.?
கடந்த திங்கள் கிழமை பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் கூடியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாள் ஆளுநர் உரை, அடுத்த இரண்டு நாள் விவாதம் , அதற்கடுத்து இன்று முதல்வர் பதிலுரை என பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி..!
முன்னதாக திங்களன்று ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை வாசிக்க்காமல், அதனை வாசிக்க தனக்கு விருப்பமில்லை எனவும், இந்த சட்டமன்றம் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் கூறி உரையை முற்றிலும் புறக்கணித்தார்.
இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை முழுதாக வாசித்ததோடு ஆளுநர் பேசியது சட்டமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்படாது எனவும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இன்று ஆளுநர் நிகழ்த்திய உரைக்கு பதில் உரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று நிகழ்த்த உள்ளார். இதில் ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று , சட்டப்பேரவையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் மக்களாவை தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்ற தனி தீர்மானங்களைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
இன்று முதல்வர் பதிலுரையை தொடர்ந்து , நாளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.