மிக்ஜாம் புயல்.! திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) தலைநகர் சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இலலாத அளவுக்கு மழைபொழிந்து, கடந்த 2015இல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் மிக தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களை மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மீட்பு படையினர் படகுகள் மூலம் அழைத்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

சென்னையில் நாளை 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் – அமைச்சர் அறிவிப்பு..!

இருந்தும் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இது குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றும்,

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் திமுக தொண்டர்களுடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மீட்பு பணிகளில் ஈடுபட முன்வர கோரி திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்