Tamilnadu CM MK Stalin [File Image]
சென்னை: மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் ஆகிய நிகழ்வுகளில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் ஜூலை 11ஆம் தேதி தருமபுரியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட விரிவாக்க நிகழ்ச்சியிலும் , அடுத்து, கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2023, டிசம்பர் 18ஆம் தேதி தமிழக அரசால் தொடங்கபட்ட மக்களுடன் முதல்வர் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 8.74 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலனை செய்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டம் அடுத்து ஜூலை 11ஆம் தேதி அனைத்து கிராம பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அதே போல, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14,40,351 மாணவர்கள் பயன்பெறுள்ளனர்.
மேற்கண்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் ஜூலை 15 கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளன்று அனைத்து கிராமப்புறங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனை திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். அதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளனர்.
அதே போல, ஜூலை 11இல் தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளனர்.
அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் இந்த நிகழ்வில், அனைத்து எம்எல்ஏக்களும், எம்பிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…