கனமழை பாதிப்பு : நெல்லைக்கு ஒரு அமைச்சர், தென்காசிக்கு ஒரு அமைச்சர்! மு.க.ஸ்டாலின் பேட்டி!
தென்காசி மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நெல்லை மாவட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் பேட்டியளித்தார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒரு சில இடங்களில் சாலைகளில் நேர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், கனமழை பாதிப்புகளையும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணிகள் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், நெல்லை , தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அங்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவிருத்தி உள்ளோம். மேலும், இங்கிருந்த்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை பெரிய பாதிப்பு இல்லை. அப்படி வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தென்னாசிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழைநீர் மீட்பு பணிகளை பார்வையிட உள்ளார். நெல்லைக்கு கே.என்.நேரு அனுப்பிவைக்கப்படுவார். அவர் தற்போது திருச்சியில் கனமழை பெய்துள்ளதால் அங்கு சென்றிருக்கிறார். ” என்று கனமழை மீட்பு பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டலைன் பேட்டியளித்துள்ளார்.