தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டப்பட்ட பல்வேறு அரசு கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் திருவள்ளூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.12 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கடலூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 34 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் 26 மாவட்டங்களில் 5.16 கோடி ரூபாய் செலவில் பூமாலை வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வாழ்ந்து காட்டுவோம் எனும் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண் தொழில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் பற்றிய நலன்களை பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் காப்பதற்காக விவசாயிகள் எளிதாக தங்கள் மண்வளம் பற்றியும் அதன் தன்மை பற்றியும் எளிதாக அறிவதற்காக தமிழ் மண்வளம் எனும் இணையதளம் இன்று துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் அளவில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…