MK Stalin – கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய மாவட்டமாக உருவெடுத்தது மயிலாடுதுறை மாவட்டம். அதன் பின்னர் அதற்கென தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அமைக்க அப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து இன்று மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுமார் 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடம், உட்பட நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், 71 முடிந்த கட்டடங்கள், 40 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல், 12573 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் விரைவில் கட்டப்படும்.
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் தடுப்புகள் அமைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் வானகிரி மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும்.
நாகை மாவட்டம் சிறுதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் கரை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும். புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல. அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது. பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…