புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! 

Tamilnadu CM MK Stalin

MK Stalin – கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய மாவட்டமாக உருவெடுத்தது மயிலாடுதுறை மாவட்டம். அதன் பின்னர் அதற்கென தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அமைக்க அப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து இன்று மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…

சுமார் 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை ஆட்சியர் கட்டடம், உட்பட நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 655 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், 71 முடிந்த கட்டடங்கள், 40 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல், 12573 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு  நல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Read More – மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது.  மயிலாடுதுறை நகராட்சிக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் விரைவில் கட்டப்படும்.

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் தடுப்புகள் அமைக்கப்படும்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் வானகிரி மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும்.

READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!

நாகை மாவட்டம் சிறுதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் கரை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும். புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல. அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது‌. பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்