தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புதிய நிலக்கரி இயந்திரத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தூய்மை பணியாளருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலக்கரி இறக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.
325 கோடிக்கு புதிய இயந்திரம் : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு தற்போது புதியதாக நிலக்கரி இறக்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு சார்பில் சுமார் 325 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாடுகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
80 கோடி ரூபாய் சேமிப்பு : இந்த 325 கோடி ரூபாய் புதிய நிலக்கரி இறக்கும் இயந்திரம் மூலம் அதிக திறன் கொண்டு நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரையில் நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். ஒரு டன்னிற்கு (1000 கிலோ) 700 ரூபாயில் இருந்த செலவானது தற்போது 500 ரூபாயாக குறையும். இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வருடத்திற்கு 80 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கும் எனவும் கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…