தமிழகத்தில் தை 1 பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளும், ரேக்ளா ரேஸ் போன்ற மாட்டுவண்டி பந்தையமும் நடைபெற்றது. உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த திங்கள், செவ்வாய், புதன் (இன்று) கிழமைகளில் நடைபெற்று முடிந்துள்ளன.
புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.!
அதே போல மற்ற ஊர்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு போட்டியானது 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீரர்கள் (காளையர்கள்) களத்தில் சந்தித்துள்ளனர்.
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் ஜனவரி 24ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம் எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என பதிவிட்டுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…