அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

Jallikattu 2024 - Tamilnadu CM MK Stalin

தமிழகத்தில் தை 1 பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளும், ரேக்ளா ரேஸ் போன்ற மாட்டுவண்டி பந்தையமும் நடைபெற்றது. உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த திங்கள், செவ்வாய், புதன் (இன்று) கிழமைகளில் நடைபெற்று முடிந்துள்ளன.

புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.!

அதே போல மற்ற ஊர்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு போட்டியானது 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீரர்கள்  (காளையர்கள்) களத்தில் சந்தித்துள்ளனர்.

புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் – வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் ஜனவரி 24ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம் எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA