“கல்வியின் கழுத்தை நெறிக்கும் இரக்கமற்ற பாஜக அரசு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

தமிழக கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

PM Modi - TN CM MK Stalin

சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுவதாக தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளியான செய்தி தகவலின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. என்றும், PM SHRI திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்றும், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி குறிப்பை குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” தமிழகத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ” NEP2020 (தேசிய கல்வி கொள்கை 2020) திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக, அவர்கள் (மத்திய அரசு) வெளிப்படையாக மிரட்டல் விடுத்து, தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியைப் பறித்து, இப்போது பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர். இது வற்புறுத்தலுக்குச் சற்றும் குறைவானதல்ல, எங்கள் மாணவர்களின் உரிமைகளுக்காக நின்றதற்காக தண்டிக்கப்படுகிறார்கள்.

ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக, அவர்களின் கல்விக்கான அணுகலில் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற எந்த அரசாங்கத்தையும் இந்திய வரலாற்றில் பார்த்ததில்லை. தமிழக மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது!” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்