“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!

மத்திய பாஜக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் தான் என CPIM மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

CM MK Stalin speech CPIM Conference

மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று “கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மதுரை எம்பி சு.வெங்கடேசன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,”கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாகி விட்டது. மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தான்” எனக் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், ” மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். மாநில சுய ஆட்சியை அளிக்கும் பாசிச பாஜக அரசை ஆட்சியில் இருந்து ஒழித்தாக வேண்டும். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாகவே செயல்பட்டு வருகின்றனர். மாநிலங்களே இருக்க கூடாது என்றும் நினைக்கிறார்கள், வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள்.” என ஆளும் பாஜக கூட்டணி அரசு மீது தனது விமர்சனத்தை முன்வைத்து பேசினார்.

“2019 முதல் நாங்கள் இணை பிரியாமல் இருக்கிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் சில வெளி நபர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர்; அவர்களுடைய எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது. சமத்துவ சமுதாயத்தை அமைக்கவே தேர்தல் கூட்டணியை நாங்கள் அமைக்கிறோம்.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்