வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் வெள்ள நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள புறநகர் பகுதி மக்கள் இன்னும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ரேஷன் கடைகளில் 4 மாவட்டங்களில் நிவாரணம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டோக்கன் வழங்கப்பட்டது. மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் மத்திய குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…
அதன் பிறகு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் மத்திய குழுவினர் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் சாலை பள்ளிக்கூடங்கள், அரசு கட்டடங்கள், பாலங்கள் , மின் கம்பங்கம், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிஅதனை சீர் செய்ய தற்காலிக நிவாரண நிதியாக 7033 கோடியும், நிரந்தர நிவாரண நிதியாக 12659 கோடியும் மத்திய அரசு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், மீட்பு பணிகள் சிறப்பாக இருந்ததாக மத்திய குழு கூறியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.
முதல்வரின் கோரிக்கையையும், மத்திய குழு செய்த ஆய்வு அறிக்கையையும் அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய குழு அனுப்பும் என்றும் , அதனை அடுத்து தற்காலிகமாக குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…