தற்காலிக நிவாரணம் 7,033 கோடி.. நிரந்தர நிவாரணம் 12,659 கோடி.! மத்திய குழுவிடம் தமிழக முதல்வர் கோரிக்கை.! 

Tamilnadu CM MK Stalin - Chennai flood relief 2023

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டம் வெள்ள நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள புறநகர் பகுதி மக்கள் இன்னும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ரேஷன் கடைகளில் 4 மாவட்டங்களில் நிவாரணம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் டோக்கன் வழங்கப்பட்டது. மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் மத்திய குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…

அதன் பிறகு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் மத்திய குழுவினர் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் சாலை பள்ளிக்கூடங்கள், அரசு கட்டடங்கள், பாலங்கள் , மின் கம்பங்கம், மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிஅதனை சீர் செய்ய தற்காலிக நிவாரண நிதியாக 7033 கோடியும், நிரந்தர நிவாரண நிதியாக 12659 கோடியும் மத்திய அரசு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  மேலும், மீட்பு பணிகள் சிறப்பாக இருந்ததாக மத்திய குழு கூறியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

முதல்வரின் கோரிக்கையையும், மத்திய குழு செய்த ஆய்வு அறிக்கையையும் அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய குழு அனுப்பும் என்றும் , அதனை அடுத்து தற்காலிகமாக குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்