12 மாவட்டங்களில் 46,931 வேலை வாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் ரூ.38 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதலமைச்சர் முன்னதாக மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது அந்நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார் . இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில்
பரவலாக 12 மாவட்டங்களில் 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, ரூ.38,698.8 கோடி மதிப்பிலான, 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்,
மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில்,👷 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய
💵 ரூ.38,698.8 கோடி… pic.twitter.com/2VqUNoueUl— M.K.Stalin (@mkstalin) October 8, 2024