சிவகங்கை நலத்திட்டங்கள்… லிஸ்ட் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிவகங்கையில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

TN CM MK Stalin

சிவகங்கை : தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கைக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தடைந்தார். நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். மாலை வேளையில் மாணவர் விடுதி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து இன்று சிவகங்கையில் பல்வறு முடிவுற்ற திட்டங்களை துவங்கி வைத்தும், புதிய திட்டங்களையும் முதலமைச்சர் துவங்கி வைத்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்ள் குறித்து எடுத்துரைத்தார்.

அவர் கூறுகையில், ” சிவகங்கையில், திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்.  சிவகங்கை மருத்துவ கல்லூரி.  ரூ.14 கோடி செலவில் 55 திருக்கோவில் திருப்பணிகள்.

இளையான்குடியில் சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்ற வளாகம். கருவூலம், அரசு மருத்துவ கல்லூரி கட்டிட விரிவாக்கம், புறவழிச் சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாணவர்கள் விடுதி கட்டடம், பள்ளி கட்டிட விரிவாக்கம், அரசு மருத்துவமனை கட்டிட விரிவாக்கம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலை, மகளிர் கல்லூரி, கூட்டுறவு தொழிற்சங்க கட்டடம் ஆகிய கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நேற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தோம்.

அதனை தொடர்ந்து அடுத்து சிவகங்கையில் நிறைவேற்றம் செய்யப்பட உள்ள திட்டங்கள், 8 பேரூராட்சிகள், 245 ஊராட்சிகள், 3 நகராட்சிகள் பயன்பெரும் வகையில் ரூ.1,753 கோடி பொருட்செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவடையும். சங்கராபேரி கோட்டை மறுசீரமைப்பு,

ரூ.130 கோடி மதிப்பீட்டில் 500 குடியிருப்புகள், ரூ.35 கோடி செலவீட்டில் புதிய ஐடி பார்க், ரூ.100 கோடி செலவீட்டில் சட்டக் கல்லூரி, சிறார்வயல் பகுதியில் தியாகி ஜீவானந்தம் அவர்களுக்கு மணிமண்டபம், ரூ.64 கோடி மதிப்பீட்டில் செட்டிநாடு கல்லூரி, சிவகங்கையில் கூடுதல் மகப்பேறு மருத்துவ கட்டடம், பேருந்து நிலையம் சீரமைப்பு, ரூ.17 கோடி செலவில் திருபுவனத்தில் வைகை மேம்பாலம் ஆகியவை அமைக்கப்படும்.” என முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்