தமிழகத்திற்கு பாஜக ஒரு செங்கலை தாண்டி ஒன்றுமே செய்யவில்லை… முதல்வர் காட்டம்.! 

PM Modi - CM MK Stalin

MK Stalin : கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக, ஒரு செங்கலை தாண்டி வேறு ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் நான் அனைவரும் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை நடத்தும் பணிகளிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில். பாஜக அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து உள்ளார். அவர் கூறுகையில், டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்பட்டது.

அதற்கு உரிய நிவாரண நிதியை நாங்கள் மத்திய அரசிடம் கோரினோம். ஆனால், அவர்கள், தற்போது வரை அதனை தரவில்லை. இதனால் நீதிமன்ற வரை சென்றுள்ளோம் என குறிப்பிட்டார். மேலும், மாநில கூட்டாட்சி, ஜனநாயகம் என்று பேசும் இவர்கள் கடைசியாக எப்போது முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள் என்று கூறுங்கள் என்று வினாவினார்.

10 வருடங்களாக வாய் திறக்காத பிரதமர் மோடி, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கையில் எடுத்து இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸில் ஒரு செங்கலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் தனது விமர்சனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்