பிஞ்சு உயிர்களை காப்பாற்றிய ஓட்டுனரின் மனிதநேயம்.! முதலமைச்சரின் நெகிழ்ச்சி செயல்.!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஒட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது மலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்தார். உடனடியாக மலையப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர் உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு மலையப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை விட்ட ஓட்டுநர் மலையப்பனுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தார். இது குறித்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் பதிவை குறிப்பிட்டு இருந்தார். மேலும், மலையப்பன் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அரசு அறிவிப்பில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த மலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம்.
காலம் சென்ற பள்ளி வாகன ஒட்டுநர் மலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மலையப்பன் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் திரு.சேமலையப்பன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mp_saminathan pic.twitter.com/jnvPpqBCFh
— TN DIPR (@TNDIPRNEWS) July 25, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025