அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏன் துறை மாற்றம்.? முதல்வர் விளக்கம்.!

Minister Palanivel Thiyagarajan - Tamilnadu CM MK Stalin

2021இல் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது நிதித்துறை பொறுப்பானது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தமிழக நிதித்துறையை திறம்பட கையாண்டு வந்தார் அமைச்சர் பி.டி.ஆர். இப்படியான சூழலில் கடந்த மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுக்கப்பட்டது.

இதற்கு பின்னணியில் அப்போது வெளியான ஒரு ஆடியோ இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் பற்றி பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என்பதை பிடிஆர் அப்போதே தெளிவுபடுத்தினார். இதனை அடுத்து முதல்வருடனான சந்திப்பு பிறகு அமைச்சரவை துறை மாற்றம் நிகழ்ந்தது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் இந்த முறை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ReadMore – இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

இந்நிலையில், இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ள Umagine TN 2024 எனும் 2 நாள் தொழில்ட்ப மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பம் 3 தலைமுறைகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.

திருச்சி என்ஐடி, எம்ஐடி, வெளிநாடுகளில் படிப்பு வேலை என்று இருந்தாலும், தாய் நாட்டிற்கு சேவை ஆற்ற தனது அறிவாற்றலை தமிழக மக்களுக்கு அளிக்க பணியாற்றி வருகிறார் பழனிவேல் தியாகராஜன். அவர் நிதித்துறையில் இருந்த போது பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.

அதே போல, அவர் தலைமையில் தகவல் தொழில்நுப்ட துறையில் பல்வேறு மாற்றங்கள் வேண்டும் என்றே அவரை இந்த துறைக்கு மாற்றினேன். இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதற்கு இந்த மாநாடு தான் சாட்சி என கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்