CM MK Stalin : அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் பயம் தெரிகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீப காலமாக தமிழகத்துக்கு அடிக்கடி வர தொடங்கியுள்ள பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது.
அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடிகிறது. தமிழகத்துக்கு வந்த பிரதமர் திமுக பற்றி அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டுவரப்பட்டது, எதற்கு தடையாக இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். திமுகவை ஒழித்து விடுவேன் என பேசியிருப்பது அவரது பதவியை தரம் தாழ்த்தும் செயலாகும்.
திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு கூறும். அதனால் பிரதமர் மோடி பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்லமாட்டேன். நல்ல ஆளும்கட்சியாக இருக்க தெரியாத பாஜக, வரும் காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் வழங்காமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை. பாஜக அரசின் வஞ்சக செயல்களை பட்டியலிட்டு மக்களிடம் திமுகவினர் பரப்ப வேண்டும். மத்திய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும். பிறந்தது முதலே திமுககாரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக அளிக்கும் தொல்லையை பார்க்கும்போது இந்தியா கூட்டணி வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி என, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடையும் வகையில் திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…