பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

CM MK Stalin : அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் பயம் தெரிகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீப காலமாக தமிழகத்துக்கு அடிக்கடி வர தொடங்கியுள்ள பிரதமர் மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது.

Read More – திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு!

அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடிகிறது. தமிழகத்துக்கு வந்த பிரதமர் திமுக பற்றி அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டுவரப்பட்டது, எதற்கு தடையாக இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். திமுகவை ஒழித்து விடுவேன் என பேசியிருப்பது அவரது பதவியை தரம் தாழ்த்தும் செயலாகும்.

Read More – உதய சூரியனுக்கு “நோ”.! பம்பரம் சின்னத்தில் தான் போட்டி.! மதிமுக திட்டவட்டம்.!

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு கூறும். அதனால் பிரதமர் மோடி பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்லமாட்டேன். நல்ல ஆளும்கட்சியாக இருக்க தெரியாத பாஜக, வரும் காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் வழங்காமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை. பாஜக அரசின் வஞ்சக செயல்களை பட்டியலிட்டு மக்களிடம் திமுகவினர் பரப்ப வேண்டும். மத்திய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும். பிறந்தது முதலே திமுககாரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக தொடங்கியுள்ளனர்.

Read More – உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக அளிக்கும் தொல்லையை பார்க்கும்போது இந்தியா கூட்டணி வெற்றி உறுதியானதாகவே தெரிகிறது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி என, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை அடையும் வகையில் திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்