கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்தன. அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. தற்போதும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் முழுவதும் வடியாமல் உள்ளது. அதனை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்திருந்தார். முதலில் தூத்துக்குடி வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மக்களிடம் நிவாரண முகாம்களில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார். அதன் பின்பு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
இதனை தொடர்ந்து திருநெல்வேலிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கும் வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனை முடித்து பின்னர் திருநெல்வேலி வர்த்தகம் மையத்தில் செய்தியாளர்கள் முன் நிவாரண உதவிகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னையை பெரு வெள்ளத்திலிருந்து பாதுகாத்தது போல, தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களையும் தமிழக அரசு காக்கும். கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது 17ஆம் தேதி தான் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கைவிடுத்த மழை அளவை விட பல மடங்கு அதிக அளவு மழை பெய்தது.
இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மழையானது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 94 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளைக்காடாய் காட்சியளிக்கிறது. ஒரு ஆண்டில் செய்ய வேண்டிய மழையானது ஒரு நாளில் பெய்தது. 1870ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவு மழை இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி என பலவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வானிலை ஆய்வு மையம் தாமதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவிப்பை கொடுத்தாலும், தமிழக அரசு அதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. மழை பெய்தவுடன் 10 அமைச்சர்கள் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரண பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். காவல் மீட்பு படையினர் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள், 375 தமிழக பேரிடர் படையினர் கொண்ட 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் களத்தில் உள்ளனர். மேலும், பயிற்சி பெற்ற 230 மீட்பு படை வீரர்கள் களத்தில் இருக்கின்றனர். இதுபோக 128 ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 143 முலாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்தும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும் பலமுறை கேட்டறிந்து கொண்டேன். மேலும், மத்திய அரசு தொடர்பு கொண்டு உடனடியாக தென் மாவட்டத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ரூ.2000 கோடி கேட்டுள்ளேன் என அந்த உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனை அடுத்து நிவாரண உதவிகள் தொடர்பான விவரங்களை முதல்வர் குறிப்பிட்டார்.
என நிவாரணத் தொகை அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில், நெல்லையில் அறிவித்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…