திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய 5 அறிவிப்புகளை விழா மேடையில் அறிவித்தார்.

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்து, ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு என புதிய 5 திட்ட அறிவிப்புகளையும் அறிவித்தார். அதில்,
- கடம்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், தண்டலம் – கலசவளாநலாத்தூர் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க்கும் திட்டம்.
- திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மானூர் – லட்சுமிபுரம் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.23 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம்,
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் காக்களூர் ஒன்றியத்தில் உள்ள தாமரைக்குளம் மேம்படுத்தக்கூடிய பணிகளானது ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நமே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் திட்டம்.
- இந்தியாவில் 2வது மிக பெரிய உப்புத்திறன் கொண்ட ஏரியாக திகழும் பழவேற்காடு ஏரியானது, பறவைகளுக்கான வாழ்விடமாகவும், சுற்றுலாத்தலமாகவும் மாறி வருகிறது. இந்த பகுதியில் சூழலியல் சுற்றுலா தளம் ஏற்படுத்தப்படும். மேலும், அங்கிருக்கக்கூடிய வைரவன் குப்பம் மீனவர்களின் நலனுக்காக புதிய வலை பின்னும் கூடம் அமைத்து தரப்படும்.
- வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடி செலவீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் திட்டம்.
ஆகிய புதிய 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025