கோவைக்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்., ஐடி பார்க் முதல், கிரிக்கெட் மைதானம் வரை.,
கோவையில் புதிய ஐடி பார்க், விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை அனுப்பர்பாளையத்தில் பல்லகல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தோடு சேர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், ஐடி பூங்கா , விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அடங்கும். கோவைக்கு முதல்வர் அறிவித்த நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில்,
- ரூ.1848 கோடி செலவில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
- 17 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா (IT பார்க்) அமைக்கப்படும்.
- கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.
- ரூ.126 கோடி மதிப்பீட்டில் தங்க நகை விற்பனைக்கான தனி தொழில் வளாகம் அமைக்கப்படும்.
- அவிநாசி சாலையில் ரூ.600 கோடி செலவீட்டில் நீலாம்பூர் வரை மேம்பாலம் கட்டப்படும்.
- கோவை விளைநிலங்களை பாதுகாக்க, அப்பகுதிகளில் யானை புகாத வண்ணம் நவீன வேலிகள் அமைக்கப்படும்.
- கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராமங்களுக்கு பயனளிக்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 295 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் ரூ.51 கோடியில் மேம்படுத்தப்படும்.
- புதுப்பிக்கப்பட வேண்டிய சாலைகளை எல்லாம் தரமான தார் சாலைகளாக மேம்படுத்திட ரூ.200 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025