ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு ஹஜ் இல்லம், ரூ.480 கோடியில் சிப்காட், மீனவர்களுக்கான புதிய இறங்குதளங்கள் என நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில் ரூ.423 கோடியில் ஏற்கனவே முடிவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. இதில் அரசு நலத்திட்டங்கள் குறித்தும் புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக நாகை மாவட்டத்திற்கு என புதிதாய் 6 முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதில், வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய தொழிற்சாலைகள், மீனவர்களுக்கான திட்டம், பேரிடர் மையம், ஹஜ் இல்லம் ஆகியவை பற்றி அறிவித்தார்.
முதலமைச்சரின் 6 முக்கிய அறிவிப்புகள் :
- வேதாரண்யம், தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டர இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நோக்கில், அப்பகுதியில் இருக்கும் சுமார் 480 ஏக்கர் அரசு புறம்பப்போக்கு நிலத்தில் ரூ.280 கோடி செலவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும. இதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் செயல்படும்படியான அனுமதிக்கதக்க தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
- விழுந்தமாவடி, வானவன் மாதேவி, காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி செலவீட்டில் புதிய மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
- தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் கோடியக்கரை ஆகிய இடங்களில் தலா ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் 3 தளங்கள் கொண்ட பல்நோக்கு பேரிடர் மையம் அமைக்கப்படும்.
- நாகப்பட்டினம் நகராட்சியின் 150 ஆண்டுகால பழைமைவாந்த நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
- நாகை கீழ்வேளூர் மற்றும் வேதாரணமயம் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு வடிகால்கள் மற்றும் மதகுகள், இயக்க அணைகள் ஆகியவை ரூ.32 கோடி செலவீட்டில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
- இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளக்கூடிய இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில். ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் .
என நாகை மாவட்டத்தில் 6 புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025