மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஒன்றாக மரியாதை.!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

சென்னை : இன்று மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த் தூவி மரியாதைசெலுத்தினார்.
இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , சென்னை மேயர் பிரியா , திமுக எம்பிக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஒன்றாக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025